(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

சாதாரண தர பரீட்சையில் சித்தி பெறாத மாணவர்களுக்கு அரிய சந்தர்ப்பம் !

சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத 4500 மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.



புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் உயர்தரம் கற்பதற்கான சந்தரப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
43 பாடசாலைகளில் அனுமதிக்கப்படும் இந்த மாணவர்களுக்கு, தொழில்நுட்ப பாடங்கள் கற்பிக்கப்படும்.

சித்தி பெறாத மாணவர்களுக்காக 26 தொழில் தொழில்நுட்ப பாடங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அந்த பாடங்களுக்காக பட்டம் அல்லது டிப்ளோமா தகுதிகளை கொண்ட 2000 ஆசிரியர்களை இணைத்து கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் அனைத்து மாணவர்களும் 13 வருடங்கள் கற்கையை பூர்த்தி செய்யும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

அதன் பின்னர் சாதாரண தரத்தில் சித்தியடையாத அனைத்து மாணவர்களும் இந்த கற்கையை மேற்கொள்வதற்காக உயர்தரத்தில் இணைவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை