(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

சிறப்பாக இடம்பெற்ற சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலய கொடியேற்றத் திருவிழா

வரலாற்று புகழ்பெற்ற சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் பேராலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா 22.08.2017  கொடியேற்றதுடன் ஆரம்பமாகியுள்ளது.


குறித்த பெருவிழா பிரம்மோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ கைலாசநாத வாமதேவக் குருக்கள், ஆலய ஸ்தானிக குரு சிவஸ்ரீ உலகநாத புஸ்பராஜ் குருக்கள் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

 (20)ஆரம்பமான மகோற்சவமானது உற்சவ காலங்களில் எதிர்வரும் அடுத்த மாதம் 3ம் திகதியில் இருந்து 5 ஆம் திகதி வரை மயில்கட்டுத் திருவிழா உற்சவம் இடம்பெறவுள்ளது.

ஆலயத்தின் உற்சவ காலங்களில் குடிவாரியான திருவிழா முறைமையின்படி ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் விசேட திருவிழாக்கள் இடம்பெறவுள்ளது. ஆலயத்தின் திருவிழா மகோற்சவமானது 16 நாட்களைக் கொண்ட மகோற்சவப் பெருவிழாவாக இடம்பெறவுள்ளது.





சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா காலங்களில் ஆலயத்தில் ஒவ்வொரு தினத்திற்கும் உரிய குடிமக்களின் நெறிப்படுத்தலின்கீழ் பக்திசார் கலை நிகழ்வுகள் ஆன்மீகம்சார் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ சித்திர வேலாயுதரின் இறுதி நாள் தீர்த்தோற்சவமானது எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதி புதன்கிழமை சித்தாண்டி உதயன்மூலையில் அமைந்துள்ள சரவணப் பொய்கையின் பிரணவத் தீர்த்தத்துடன் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா நிறைவடையவுள்ளது.

மேலும், ஆலயத்தின் கொடியேற்ற உற்சவத்திற்கு பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் மிகவும் சிறப்பான முறையில் பக்திபூர்வமாக சித்தாண்டி வேலவனின் கொடியேற்றம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை