மோட்டார் சைக்கிள் வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் வரி நீக்கம் செய்தமை
காலோசிதமான செயலல்ல. பொலிஸ் போக்குவரத்து அமைச்சு சுற்றாடல் அமைச்சு என
எந்த தரப்பினரையும் ஆலோசிக்காது அரசாங்கம் குறித்த முடிவை எடுத்துள்ளமை
பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர்
கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.
சுற்றாடல் பிரச்சினைகளுக்கும் வாகன நெரிசல்களுக்கும் வழிகோலும் குறித்த
தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசலனை செய்ய வேண்டும் எனவும் திறன் மிக்க
போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் தனியார் ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
