சிறுநீரக
நோய்க்கு ஆயர்வேத சிகிச்சை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை
விரிவுபடுத்துவதற்கு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச அமைச்சு நடவடிக்கை
மேற்கொண்டுள்ளது.
இதன்கீழ்
வடமத்திய மாகாணத்தில் சிறுநீரக நோய் பாதிப்புக்கான காரணத்தையும்
கண்டறிவதற்காக மதவாச்சியில் ஆய்வு வைத்திய நிலையம் ஒன்று
அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டொக்டர் ராஜித சேனரட்னவின் தலைமையில் இந்த
வைத்தியசாலை இன்று பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. ஆயுர்வேத
வைத்திய சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காக தற்பொழுது இரண்டாயிரத்து 480
நோயாளிகள் இங்கு பதிவு செய்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மாதாந்தம் 600க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆயுர்வேத சிகிச்சை வழங்கக்கூடியதாக இருக்கும்.
ஆயுர்வேத
சமூக சுகாதார சேவை முறையாக முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைவாக வடமத்திய
மாகாணத்தில் ஆயுர்வேத சமூக சுகாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டு ஆயுர்வேத
சுகாதார சேவையை கிராமத்தில் முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக அனுராதபுரம் மாவட்டத்தில் இவ்வாறான எட்டு மத்திய நிலையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில்
கலேன்வித்துனுவேவ மற்றும் தலாவ புதிய சுகாதார மத்திய நிலையங்களை சுகாதார
அமைச்சர் திறந்து வைக்கவுள்ளார். நாச்சியார் தீவு, திறப்பன மற்றும்
ரம்போவே ஆகிய சமூக சுகாதார மத்திய நிலையங்கள் இவ்வருடத்தில்
அமைக்கப்படவுள்ளன. இந்த மத்திய நிலையங்கள் மூலம் போஷாக்கு, பாதுகாப்பான
நீர் விநியோகம், தாய்சேய் சுகாதாரம், குடும்ப சுகாதாரம், மனோவியல்
சுகாதாரம் உள்ளிட்ட 17 பிரிவில் சேவைகள் வழங்கப்படவுள்ள.
