அடுத்த
வருடம் முதல் பாடசாலை கண்காணிப்பாளர்களை நியமித்து பாடசாலை கண்காணிப்பு
சேவையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது
என்று கல்வி இராஜாங்க
அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை
நாட்டில் தற்போது 98 ஆக உள்ள வலயக் கல்விப் பணிமனைகளின் எண்ணிக்கையை 200
வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாடசாலை கண்காணிப்பு நடவடிக்கைகளை
நன்கு முன்னெடுத்து பாடசாலைகளின் பௌதீக மற்றும் மனித வளங்களை உயர்ந்த
மட்டத்திவல் பேணுவது இதன் நோக்கமாகும் எனறும் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.
இராதாகிருஷ்ணன் மேலும் கூறினார்.
