நேர
காலத்துடன் தமது பிள்ளைகளை பாடசாலை பரீட்சை மத்திய நிவையத்திற்கு அழைத்து
வருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பரீட்சைக்குத் தோற்றுவோர் தமக்கான பரீட்சை இலக்கத்தை பாடசாலை சீருடையில் அணிந்திருக்க வேண்டும்.
பெற்றோருக்கு
பரீட்சை மத்திய நிலைய வளவிற்கு பிரவேசிப்பதற்கு அனுமதியில்லை. ஓய்வு
நேரத்தில் பெற்றோருக்கு பரீட்சை விளவிற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட
மாட்டாது என்பதனால் பிள்ளைகளுக்கு சிற்றூண்டிகளையும் தண்ணீர்
போத்தல்களையும் வழங்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக்
கொண்டுள்ளார்.
புலமைப்பரிசில்
பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும்
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ள ஆலோசனைகளிலேயே
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சையின்
முதலாவது வினாப் பத்திரம் காலை 9.30ல் இருந்து 10.15 வரையில் நடைபெறும்.
இரண்டாவது வினாப் பத்திரம் முற்பகல் 10.45ற்கு வழங்கப்படுவதுடன் அதற்காக
விடையளிப்பதற்கு 12 மணி வரை கால அவகாசம் வழங்கப்படும்.
விடையளிப்பதற்காக
பென்சில், அல்லது பேனையைப் பயன்படுத்த முடியும். பரீட்சை இலக்கத்தை
விடைத் தாளில் சரியாக குறிப்பிடுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
