சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு கொமாண்டோ படைப்பிரிவான சிறப்பு
அதிரடிப்படையின் முதலாவது கட்டளை அதிகாரியாக இருந்த போதி லியனகே
மாடிப்படியில் இருந்து தவறி வீழ்ந்து மரணமானார்.
மாடிப் படியில் இருந்து தவறி வீழ்ந்து கண்டி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் போதி லியனகே,
நேற்று காலை மரணமானார்.
இவர், 1983ஆம் ஆண்டு சிறிலங்கா காவல்துறையில் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்ட போது, அதன் முதலாவது கட்டளை அதிகாரியாக இருந்தவர்.
சுமார் ஒரு ஆண்டுகாலம் போதி லியனகே இந்தப் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கினார்.
காவல்துறை தலைமையகத்தில் நிர்வாகப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த
நிலையில் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் போதி லியனகே, ஓய்வு
பெற்றிருந்தார்.
