(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

பிரதமர் முதிர்ச்சியான தலைவராக நாட்டின் முன்னேற்ற பயணத்திற்கு ஊக்கமளித்தவருகிறார்



பிரதமர் ரணில் விக்ரமசிங்க மிகவும் முதிர்ச்சியான தலைவராக நிதானமான முறையில் நாட்டின் முன்னேற்ற பயணத்திற்கு ஊக்கமளித்தவருகிறார் என்று முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தொவித்தார்.



பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நான்கு தசாப்தகால அரசியல் வாழ்க்கையில் முக்கியமான தருணங்களை சித்தரிக்கும் கண்காட்சியின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்டு முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
 
எதிர்காலத்தை காணும் ரணில் என்ற தொனிப்பொருளில் கண்காட்சி ஏற்பாடாகியுள்ள இந்த கண்காட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆரம்பித்து வைத்தார்.
 
முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தொடர்ந்து உரையாற்றுகையில் :  
பிரதான கட்சிகள் இரண்டின் தலைவர்கள் குறுகிய கட்சி அரசியல் எல்லைகளுக்கு அப்பால் சென்று இணக்கப்பாட்டு அரசாங்கத்தை அமைக்க முடிந்துள்ளது. இதில் பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும், இரு தலைவர்களும் ஆச்சரியமான விதத்தில் மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளார்கள்.
 
 இங்கு எமது கட்சியைச் சேர்ந்த சிலர் கட்சியின் விதிமுறைகளையும் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக மரபுகளையும் மீறி மிகவும் மோசமான முறையில் நடந்து கொள்கிறார்கள். இவர்கள் பிரதமரின் பெயரை குறிப்பிட்டு அவதூறு செய்கிறார்கள். ஆனால் பிரதமர் மோசமான பதில் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. இதுவே நாட்டுத் தலைவர்களிடம் நாம் எதிர்பார்க்கும் ஒழுக்கமாகும். 
 
பிரதமர் மிகவும் முதிர்ச்சியான தலைவராக நிதானமான முறையில் நாட்டின் முன்னேற்ற பயணத்திற்கு உரமூட்டுகிறார். இவ்வாறு நாட்டை முன்னேற்றிச் செல்ல முடியுமென நாம் நம்புகிறோம். ஜனாதிபதியும் தமது தரப்பில் முதிர்ச்சியாக கையாளுகிறார். இரு முனைகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் இருவர் மக்கள் நலனுக்காக வாத பிரதிவாதங்களை மறந்து செயற்படுகிறார்கள். இது ஏனைய ஆசிய நாடுகளில் காண முடியாத அபூர்வமான நிலைமை என்றும் மேலும் தெரிவித்தார்.
 
 

 
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை