இலங்கை வரலாற்றில் இரண்டாவது தடவையாக மேற்கொள்ளப்பட்ட இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கண்டி போதனா வைத்தியசாலையின் மருத்துவர் குழாம் இதனை வெற்றிகரமாக நேற்று (27) நடத்தி முடித்துள்ளனர்.
நிபுணத்துவ மருத்துவர்கள், தாதிமார் அடங்கலாக சுகாதார பிரிவினர் நேற்று
முன்தினம் (26) இரவு 8.00 மணிமுதல் நேற்று (27) காலை 5.00 மணிவரை சுமார் 9
மணி நேரம் இந்த சத்திர சிகிச்சையை நடத்தியுள்ளனர்.
அளுத்கமையைச் சேர்ந்த சச்சினி செவ்வந்தி (19) என்ற இளம் பெண்ணுக்கே இந்த சிசிக்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இருதய மாற்று அறுவை சிகிச்சையை பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணர்
டொக்டர் அனில் அபேவிக்ரம தலைமையிலான குழு செய்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
