மேஷம்
மேஷம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள்.
பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல்
ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.
வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் புதிய
சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள்
உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து
நல்ல செய்தி வரும். வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புகழ்
பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள்
கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.
மிதுனம்
மிதுனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகள்
கிடைக்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். விரும்பிய பொருட்களை
வாங்கி மகிழ்வீர்கள். நட்பு வட்டம் விரியும். விருந்தினர் வருகை உண்டு.
வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள்
ஒத்துழைப்பார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நாள்.
கடகம்
கடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து
வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உறவினர், நண்பர் களை
பகைத்துக் கொள்ளாதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். உணவில் காரம்,
வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம்
தாமதமாக வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம்.
முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
சிம்மம்
சிம்மம்: கணவன் மனைவிக்குள் விவாதங்கள் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய
செலவுகள் இருக்கும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். சகோதர வகையில்
செலவுகள் வரும். திடீர் பயணம் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி
வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக் கும். போராடி
வெல்லும் நாள்.
கன்னி
கன்னி: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால்
மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து
உயரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.
வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.
உத்யோகத்தில் உங்கள் கைஓங்கும். இனிமையான நாள்.
துலாம்
துலாம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள்
உங்களை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பார்கள். வீடு, வாகனத்தை சீர்
செய்வீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் புது
வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவர்.
சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விருந்தினர்களின்
வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வெளிவட்டாரத்தில்
மதிக்கப்படுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வாகனப்பழுதை
சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.
உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். புத்துணர்ச்சி
பெருகும் நாள்.
தனுசு
தனுசு: சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய பிரச்சனைகள் தலைத்தூக்கும்.
தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக
இருப்பார்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது.
வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது.
உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட
வேண்டிய நாள்.
மகரம்
மகரம்: மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். கல்யாணப்பேச்சு
வார்த்தை சுமூகமாக முடியும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.
வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி
மதிப்பார். எதிர்பாராத நன்மை உண்டாகும் நாள்.
கும்பம்
கும்பம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் தேடி வந்து
பேசுவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள்
வரும். வீடு வாங்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை
கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி
பாராட்டுவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.
மீனம்
மீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று
முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக
செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர
சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.
நினைத்தது நிறைவேறும் நாள்.
