(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

2018 வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றில்!

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உத்தேச ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்னவினால் உத்தேச ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தேச சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
2018 ஆண்டுக்கான வருமானம் 2ஆயிரத்து 175 பில்லியனாகவும், செலவு 3ஆயிரத்து 982 பில்லியனாகவும் அமைந்துள்ளது. இதற்கமைய 2018 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஆயிரத்து 807 பில்லியன் ரூபாய் துண்டுவிழும் தொகையாக அமைந்துள்ளது. இதேவேளை, 2017 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வருமானம் 2 ஆயிரத்து 98 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்ததுடன், செலவு 2 ஆயிரத்து, 723 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை