கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வரையில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 45 ஆயிரத்து 077 ஆகும்;.
இவ்வருடத்தில் இத்தொகை ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து 499 ஆக அதிகரித்துள்ளது. இந்த வருடத்தில் கடந்த 9 மாதத்தில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 2.9 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்து 51 ஆயிரத்து 931 ஆகும். கடந்த வருடத்தில் இதே காலப்பகுதியில் 15 இலட்சத்து 8 ஆயிரத்து 405 பேர் வருகைதந்துள்ளனர்.
பிரிட்டன், கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா, உக்ரைன், தெற்காசியா, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
