(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

சவூதி அரேபியா: விளையாட்டு கூட்டமைப்பின் தலைவராக முதன்முறையாக பெண் நியமனம்.

மன்னர் ஆட்சி நடைபெறும் சவூதி அரேபியாவில் சில மாதங்களுக்கு முன்னர் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடை விலக்கப்பட்டது.


இதனையடுத்து, பெண்களுக்கான ஓட்டுநர் உரிமம் வழங்கும் செயல்பாடுகளில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.

 இது அந்நாட்டில் உள்ள பெண்களிடையே மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அந்நாட்டின் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவராக முதன் முறையாக பெண் ஒருவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசி ரிமா பிந்த் பந்தார் சுல்தான் விளையாட்டு கூட்டமைப்பு தலைவராக பொறுப்பேற்கும் முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார்.

அமெரிக்காவுக்கான முன்னாள் தூதராக இருந்த இளவரசர் பந்தர் பின் சுல்தானின் மகளான ரிமா அரச பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை