சீனா கடந்த 2011-ம் ஆண்டு ‘தியாங்காங்’ என்ற விண்வெளி ஆய்வுக் கூடத்தை
நிறுவியது. இது 8.5 டன் எடை கொண்டது. ‘விண்வெளி அரண்மனை’ என பெயரிடப்பட்ட
அந்த ஆய்வுக்கூடம் சீன விண்வெளி சாதனையில் மிகப்பெரிய சக்தியாக
கருதப்பட்டது.
இந்த நிலையில் அந்த ஆய்வகம் சீன விண்வெளி ஆய்வக
தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் ஆன தொடர்பை இழந்தது.
அதன்மூலம்
‘தியாங்காங்-1’ விண்வெளி ஆய்வுக்கூடம் செயல் இழந்ததாக அறிவிக்கப்பட்டது.
எனவே அது அதி விரைவாக பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது. அது குறித்து
ஹார்வார்டு விண்வெளி நிபுணர் ஜோனாதன் மக்டுவல் ‘கார்டியன்’ இதழில் ஒரு
அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் சீனாவின் ‘தியாங்காங்-1’ விண்வெளி ஆய்வுக்கூடம் பூமியில் மோதி விழ
அதிபயங்கர வேகத்துடன் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது. அது இந்த ஆண்டு
இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு (2018) தொடக்கத்தில் பூமியில் விழும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பூமியில் விழும் விண்வெளி ஆய்வுக் கூடத்தின் இடி பாடுகள்கடலில்
விழ ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 1991-ம் ஆண்டு சோவியத் யூனியனின்
20 டன் எடையுள்ள சல்யூட்-7 என்ற விண்வெளி நிலையம் பூமியில் மக்கள் வாழும்
பகுதியில் விழுந்தது.
1979-ம் ஆண்டில் அமெரிக்காவின் ‘நாசா’ மையத்தின் 77 டன் எடையுள்ள
‘ஸ்கலேப்’ என்ற விண்வெளி ஆய்வுக்கூடம் பூமியில் விழுந்தது.
அதன்
பெரும்பகுதி ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் விழுந்தது.
ஆனால் சீனாவின்
‘தியாங்காங்’ விண்வெளி ஆய்வுக்கூடத்தை வரும் வழியிலேயே எரித்து சாம்பலாக்க
நிபுணர்கள் முயற்சி மேற் கொண்டு வருகின்றனர்.
100கிலோ இடிபாடுகள் மட்டுமே
பூமியில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது,
