(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

நாட்டில் மேக மூட்டம் தொடரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் மேக மூட்டம்  தொடரக்கூடும் என்று  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 
 
நாட்டில் கடல் பிரதேசங்களில் வலுவான காற்றை எதிர்பார்கலாம். மேற்கு, சப்ரகமுவ, வடமேல், வடக்கு, காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 தொடக்கம் 150 மில்லி மீற்றர்  மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
 
 
இதேவேளை தமிழகத்தில் 3 நாட்கள் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை  தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட 111 சதவீதம் அதிகம் பெய்யும்  என்று வானிலை நிலையம்   குறிப்பிட்டுள்ளது. 
 
 
தென்மேற்கு பருவமழையும் இயல்பைவிட 29 சதவீதம் அதிகம் பெய்துள்ளது. அதேபோல், நாளை ஆந்திர கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது. 
 
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரம் அடைந்து தமிழகம் நோக்கி வந்தால் இங்கு கடும் மழை பெய்யும். 
 
தற்போது பருவமழை நேரம் என்பதால் எந்த நேரத்திலும் கனமழை பெய்யலாம் என்பதால் அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்தி உள்ளது. 
 
 
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை