வடக்கு மாகாணத்தில் புகையிலைக்கு மாற்றுப் பயிராக மர
முந்திரிகையைப் பயிரிடுவது தொடர்பில் மண்ணின் தன்மை
ஆராயப்படவுள்ளது என வடக்கு விவசாய அமைச்சின் உதவித் திட்டமிடல்
பணிப்பாளர் ஈ. சுரேந்திரநாதன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில்
விவசாயிகளின் பிரச்சினைகளைக் கேட்டறியும் நிகழ்வு தற்பொழுது
ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகின்றது.
இதன்போது விவசாயிகளின் பிரச்சினைகள் அவர்களின்
சம்மேளனங்கள், சங்கங்கள் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ளன.அவற்றில்
முக்கியமானது புகையிலைக்குப் பதிலாக மாற்றுப் பயிர் வேண்டும்
என்பதாகும். 2020ஆம் ஆண்டு புகையிலை பயிரிடுவதை முற்றாகத்
தடைசெய்யவேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் முதன்மை வாழ்வதாரப் பணப்பயிராக இது உள்ளது. ஆகவே
இதற்கான மாற்றுப்பயிர் வேண்டும் என்று விவசாயிகள்
தெரிவித்திருந்தனர்.எனவே, இதற்குப் பதிலாக மரமுந்திரிகையைப்
பயிரிடுவது தொடர்பில் தீவகப் பகுதிகளில் மண் பரிசீலனை
செய்யப்படவுள்ளது.
இதற்கு மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் உதவிகளையும்,
ஆலோசனைகளையும் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. தற்போது
ஒருகிலோ மரமுந்திரிகை இரண்டு ஆயிரம் ரூபா வரையில் விற்கப்படு
கின்றது. மரம் வளர்ந்து குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் நீர்
பாய்ச்சவேண்டிய அவசியசமும் இல்லை.ஆகவே இதனையும் புகையிலைக்குப்
பதிலான மாற்றுப்பயிராக பயிரிடுவது தொடர்பாக தொடர்ந்து
ஆராயவுள்ளோம். இதற்காக முதல் கட்டமாக தீவகப் பகுதியில் மண்
ஆராய்ச்சி செய்யப்படவுள்ளது. மண்ணின் தன்மை அடிப்படையில் மேலதிக
நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
