மட்டக்களப்பு- பட்டிருப்பு பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய 17 வயது
பெண்கள் அணியினர் தேசிய மட்ட கபடிப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை
படைத்துள்ளனர். கொழும்பில் நடைபெற்ற பழுகாமம் கண்டுமணி மகா
வித்தியாலயத்திற்கும் பண்டதரிப்பு ஜெசிந்தா மகா வித்தியா
லயத்திற்கும்
இடையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 30 – 23 எனும் புள்ளி அடிப்படையில்
பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய அணி வெற்றி பெற்று தேசிய சம்பியன் அணியாக
தெரிவுசெய்யப்பட்டது.
தேசிய அணியாக வெற்றி பெற்று கிழக்கு மாகாணத்திற்கும் தேசியத்திற்கும்
பெருமை சேர்த்துள்ள அணி வீரர்களை வரவேற்கும் வகையில் பழுகாமம் மக்களினால்
மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் மாபெரும் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.
பழுகாமத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள், பாடசாலை சமூகம்,
அரசியல்வாதிகள் இணைந்து இந்த வரவேற்பினை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து வாகனப் பேரணியாக வெற்றி பெற்ற வீராங்கனை கள்
மட்டக்களப்பில் இருந்து பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம் வரையில்
அழைத்துச் செல்லப்பட்டது.
கிராமங்கள் தோறும் மாபெரும் வரவேற்பு
அளிக்கப்பட்ட பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய கபடி அணி தேசிய ரீதியில்
சாதனை படைப்பதற்கு உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் இருந்து செயற்பட்ட
உடற்கல்வி ஆசிரியர்களாக இ.புவேந்திரகுமார் (புவி) மற்றும் கி.கிருஷ்ணராஜன்
ஆகியோருக்கும் பாடசாலை அதிபர் சு.உதயகுமார் ஆகியோரும் இதன்போது
கௌரவிக்கப்பட்டனர்.
