(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

கைபேசி !!!!!

என்னோடுதான் - இன்று
எல்லோரும் பேசுகின்றனர்
எல்லோர் கையிலும் - நான்
எளிமையாக தவழுகின்றேன்
பிறர் முகங்கள் மறந்து முகவரி தொலைத்தோர்
தினம் என்னுள்தானே
மூழ்கிப் போகின்றார்

அன்றாடம் அவசியமானேன்
ஆராரோ பாட அனுமதியளித்தேன்
தாயுக்கும் சேயுக்கும்
தரகராய் ஆனேன்
காதலர் கைகளில்
கடவுளாயானேன்
சேமிப்பு என்னுள் ஏராளம்
செலவும் என்னால் ஏராளம்
ஊரான் செய்தியும் என்னுள்
ஊருக்கு செய்தியும் என்னால்
விதமான பொருளாக
விலை உயர்ந்து போனாலும்
விடிய விடிய விழித்திருக்க
விலை கொடுத்து வாங்கிடுவார்
பச்சிளம் குழந்தைக்கு
பால் கூட தேவையில்லை
படிக்கின்ற பிள்ளைக்கு
புத்தகமே தேவையில்லை
இளவட்ட காதலருக்கு
காகிதமே தேவையில்லை
காலங்கள் கடந்தாலும்
கனவுகள் தொலைந்தாலும்
பத்திரமாய் வைத்திருப்பேன்
கச்சிதமாய் எடுத்துரைப்பேன்
மெய்ப்பொருளும் நானே
மேன்மையும் நானே
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை