வடபகுதி மக்களின் கடன்பளு பிரச்சனை பற்றி விரிவாக ஆராயவுள்ள ஆளுனர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மூலோபாயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளார்.
இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன கூட்டற்களில் மாவட்ட செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், கமநல - கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள், கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.
இன்று யாழ்ப்பாணத்திற்கான கூட்டமும் நாளை கிளிநொச்சிக்கான கூட்டமும் இடம்பெறும் என மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வடக்கில் நுண்-நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன்களைப் பெற்றுக் கொண்ட வாடிக்கையாளர்கள், அவற்றைத் திருப்பி செலுத்த முடியாமல் அவதியுறும் போக்கு நீடிப்பதாகவும் தொவிக்கப்பட்டுள்ளது.
அனுமதிபெற்ற வங்கிகள், நிதி நிறுவனங்கள், சமுர்த்தி கிராமிய வங்கிகள் ஆகியவற்றின் பிரிதிநிதிகளுடனான சந்திப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தொவிக்கப்பட்டுள்ளது.
