எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தயார் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதேவேளை
உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக
கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையில் அவர் வெற்றிபெறுவது உறுதி என்றும்
அமைச்சர் கூறினார்.
ஸ்ரீ
லங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்
மாநாட்டில் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தாவது: ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இரவு இடம்பெற்ற கட்சியின் மத்திய
குழுக் கூட்டத்தில் இது பற்றி விரிவாக கவனம் செலுத்தப்பட்டது உள்ளூராட்சி
சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென்பதிலும் அது தொடர்பான எல்லை மீள்
நிர்ணயம் மற்றும் வர்த்தமானி வெளியீடு உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் அவர் மிக
நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டுள்ளார்
இதற்கிணங்க எத்தகைய நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் அவர் அதை
வெற்றிகொள்வார் என்று தெரிவித்தார்.
ஊடகவியலாளர்
ஒருவர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரதமர கொறடா அநுரகுமார
திசாநாயக்க முன்வைத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு
பதிலளித்த அமைச்சர் மஹிந்த அமரவீர அந்தக் குற்றச்சாட்டை நாம் முற்றாக
நிராகரிக்கின்றோம். அநுரகுமார திசாநாயக்க தேர்தல் நெருங்கி வரும் நிலையில்
தேர்தலுக்காக ஆற்றிய உரை என்றார்.
செய்தியாளர் மாநாட்டில் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேயும் கலந்துகொண்டார்.
