திருகோணமலை மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின் ஏற்பட்ட கடும் மழை காரணமாக, தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இம் மாவட்டத்தின் கந்தளாய், முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம் மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக வடிகான்களில் நீர் வழிந்தோடுவதோடு, வீதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
கந்தளாய் மற்றும் முள்ளிப்பொத்தானை போன்ற கிராமப்புர பகுதிகளில் உள்ள வயல் நிலங்களும் மழை நீரில் மூழ்கி காணப்படுகின்றது.
