இலங்கை இந்திய அணிகள் மோதும் இரண்டாவது 20 ஓவர் துடுப்பாட்ட போட்டி
இன்று இரவு 7 மணியளவில் இந்தூரில் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில் இந்தூரில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் 3 தொடர்கள்
கொண்ட 20 ஓவர் துடுப்பாட்ட போட்டியின் 2ஆவது தொடர் இன்று
ஆரம்பமாகவுள்ளது.
ஏற்கனவே முதலாவது போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை அணி
வீரர்கள் இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் தீவிர
பயிற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா அணி சார்பில் ரோகித் சர்மா,லோகேஷ் ராகுல்,ஸ்ரேயாஸ்
அய்யர்,தினேஷ் கார்த்திக்,மனிஷ் பாண்டே,டோனி,ஹர்திக் பாண்ட்யா,குல்தீப்
யாதவ்,ஜெய்தேவ் உனட்கட் அல்லது முகமது சிராஜ் அல்லது பாசில்
தம்பி,ஜஸ்பிரித் பும்ர,யுஸ்வேந்திர சாஹல்ஆகியோர் விளையாடவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை அணி சார்பில் குணதிலகா,தரங்கா,சமரவிக்ரமா அல்லது குசல்
பெரேரா,மேத்யூஸ்இடிக்வெல்லா,குணரத்னே,திசரா பெரேரா,பதிரானா,அகிலா
தனஞ்ஜெயா,சமீராஇநுவான் பிரதீப் ஆகியோர் விளையாடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
