நுவரெலியா மாவட்டத்தின், ஹற்றன்- நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் நேற்று இரவு விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஹற்றனில் இருந்து தலாவாகலை நோக்கி சென்ற டிப்பா் வாகனம், அதி கூடிய
வேகத்தில் சென்றமையின் காரணமாக, டிப்பா் வண்டி, மகிழுந்து(காா்), முச்சக்கர
வண்டி என்பன ஒன்றுக்கு ஒன்று மோதியதில் காா் வண்டிக்கும் முச்சக்கர
வண்டிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஹற்றன் பொலிஸாா் தெரிவித்தனா்.
இந்த விபத்து நேற்று வெள்ளிகிழமை இரவு 08மணி அளவில் இடம் பெற்றதாக
தெரிவித்த பொலிசாா், குறித்த டிப்பா் வண்டியின் சாரதி, மது போதையில்
வாகனத்தை செலுத்தியதாகவும், சாரதி ஹற்றன் பொலிசாாினால் கைது
செய்யபட்டுள்ளதாகவும் தெரிவித்தனா்.
கைது செய்யபட்ட டிப்பா் வண்டி சாரதியை இன்று (30.12.2017) ஹற்றன்
நீதவான் முன்னிலையில் ஆஜா்படுத்தபட உள்ளதாக பொலிசாா் மேலும் தெரிவித்தனா்.
சம்பவம் தொடா்பில் மேலதிகவிசாரனைகளை ஹற்றன் பொலிஸாா் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
