பெப்ரவரி 10 ஆம் திகதிக்குப் பின்னர் இந்த நாடும் சுதந்திரக் கட்சியும்
உங்கள் பொறுப்புக்கு வருகின்றது எனவும் எனக்குப் பிறகு இந்த கட்சி எனது
குடும்பத்தினருக்கு அன்றி உங்களுக்கே பொறுப்பாகும் எனவும் கட்சியின்
சார்பில் போட்டியிடும் உள்ளுராட்சி சபை வேட்பாளர்களிடம் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நீங்களே இந்நாட்டில் நகர சபை தலைவராகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும்
அமைச்சரவை அமைச்சர்களாகவும் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் பதவிகளை
பொறுப்பேற்கவுள்ளீர்கள்.
நீங்கள் ஒரு புறத்தில் அரசியல்வாதியாகவும் மறுபுறத்தில் இந்நாட்டு
மக்களின் சகோதரனாகவும் தந்தையாகவும் உங்கள் பயணத்தை தொடரவுள்ளீர்கள்.
நீங்கள் வெற்றி பெறுவது நிச்சயம் எனவும் ஜனாதிபதி சுகததாச உள்ள
விளையாட்டரங்கில் நேற்று (29) நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு
உரையாற்றுகையில் கூறியுள்ளார்.
