நத்தார் பண்டிகையை வசதியற்றுள்ள மக்கள் மீதான எமது கரிசனையை வெளிக்காட்டும் காலங்களாக அனுஷ்டிக்கப்பட வேண்டும்.
இந்த
நத்தார் பண்டிகை காலங்களை வசதியற்று இயலாமையில் உள்ள எம் சக மக்கள் மீதான
எமது கரிசனையை வெளிக்காட்டும் காலங்களாக அனுஷ்டிக்குமாறும்
வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில்
கிறிஸ்து நாதரின் பிறப்பினை கொண்டாடும்
அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் எனது மனங்கனிந்த நத்தார் தின வாழ்த்துக்கள்.
சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நிகழ்ந்த கிறிஸ்து நாதரின்
பிறப்பானது மக்களுக்கு சமாதானத்தையும் நம்பிக்கையையும் கொண்டு வந்தது.
நத்தார் பண்டிகையின் நிகழ்வுகளானது
கிறிஸ்து நாதர் வெளிக்காட்டிய தாழ்மை,அன்பு,பிறரை நேசித்தல், மற்றும்
தியாகம் போன்ற பண்புகளை எமக்கு மீள ஞாபகமூட்டி நிற்கின்றன. மேலும் அன்பு,
மனதுருக்கம், பிறரை நேசித்தல், உண்மை ,சமத்துவம் மற்றும் சமூக நீதி போன்றவை
தொடர்பில் கிறிஸ்து நாதரின் போதனைகளானது இன்றும் எமது சமூகங்களுக்கு
தொடர்புடையதாக இருப்பதுமன்றி எப்போதும் அவை தொடர்புடையதாகவே காணப்படும்.
நத்தார் தின ஒளியானது நம்பிக்கை இழந்து வாழும் எமது மக்களின் மனங்களில்
நம்பிக்கையையும் சமாதானத்தையும் மீள் உயிர்ப்பிக்கிறதாக அமைய வேண்டுமென
பிரார்த்திப்பதோடு, இந்த நத்தார் பண்டிகை காலங்களை வசதியற்று இயலாமையில்
உள்ள எம் சக மக்கள் மீதான எமது கரிசனையை வெளிக்காட்டும் காலங்களாக
அனுஷ்டிக்குமாறும் வேண்டிக்கொள்கிறேன். இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்-,
இவ்வாறு, எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ள நத்தார்
வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
