கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு இம்முறை தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணி எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்படும் என்று ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக தெரிவித்தார்.
இதற்கான விண்ணப்பபடிவங்களுடன் சுற்று நிருபமும் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை வகுப்பு நடைபெறும் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
சுற்று நிருபத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைவாக மாணவர்களின் தகவல் மற்றும் புகைப்படங்களை எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதிக்கு முன்னதாக பத்தரமுல்லையிலுள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமையகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
பெரும்பாலான பாடசாலை அதிபர்கள் பரீட்சை நடைபெறுவதற்கு இறுதி கட்டத்திலேயே மாணவர்களின் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கின்றனர்.
எனவே இவ்வாறான பிரச்சினையை தீர்ப்பதற்காக இது நடைமுறைப்படுத்தபடவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.
