உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத வாக்காளர்களுக்கு எதிர்வரும் வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அதற்கான சந்தர்ப்பம் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு நாட்களிலும் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் கொழும்பு மாவட்டத்தில் ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்திலும் தபால் மூலமான வாக்குகளை அளிக்க முடியும்.
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக கடந்த 25ம் 26ம் திகதிகள் அதற்கென ஒதுக்கப்பட்டிருந்தன.
பொலிஸ் திணைக்களம் மற்றும் தேர்தல் அலுவலக அதிகாரிகளுக்கு கடந்த 22ம் திகதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஏதேனும் பிரச்சினைகள் காரணமாக இந்நட்களில் தபால் மூல வாக்களிப்பை செலுத்த முடியாமல் போனவர்கள் எதிர்வரும் வியாழக்கிழமையும்இ வெள்ளிக்கிழமையும் அதற்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த முடியும்.
