தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மேற்கொள்ளப்படும் 2018ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துமாறு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு பிரதேசத்தில் ஏற்படுத்தப்படுவரும் பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் பூர்த்தியாகும்போது தேவைப்படக்கூடிய குடிநீர் தொடர்பாக ஏற்படும் கேள்விகளுக்கு போதிய நீரைப் பெற்றுக்கொடுக்கவும், வறட்சி காலங்களில் களுகங்கை மற்றும் களனி கங்கை பிரதேசங்களில் குடிநீரில் உவர்நீர் கலப்பதை தவிர்க்க தடுப்புச்சுவர் அமைக்கும் திட்டத்தினை விரைவுபடுத்தும் நோக்கில் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
