மெதிரிகிரிய வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, தாதியர் விடுதி, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், மகப்பேற்று மருத்துவ நிலையம், சிறுநீரக நோய் நிவாரணப் பிரிவு ஆகியன ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நேற்று திறந்துவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் வடமத்திய மாகாண ஆளுநர் டி.பி.திசாநாயக்க, முன்னாள் மாகாண சபை அமைச்சர் சம்பத் ஸ்ரீநிலந்த, மாகாண சுகாதார செயலாளர் சமன் பந்துலசேன, மாகாண சுகாதார பணிப்பாளர் பாலித்த பண்டார, மெதிரிகிரிய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சுனில் செனரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
