(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

மஹிந்த - மைத்திரி ஒருமணிநேர இரகசிய சந்திப்பு கொழும்பில்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரது இல்லத்தில் அண்மையில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
சுமார் ஒருமணித்தியாலம் வரை நீடித்த இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் இதுவரை தகவல் வெளியாகவில்லை.
கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றை பின்தள்ளி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பல சபைகளைக் கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்த அரசியல் அதிர்வலையை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியை நீக்கி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் பதவியிலிருந்து விலக்கிவிட்டு, மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து சுதந்திரக் கட்சியின் ஆட்சியை அமைக்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வந்தது.
இது தொடர்பிலான பலசுற்றுப் பேச்சுக்களும் நடத்தப்பட்ட போதிலும் இறுதியில் தோல்வியிலேயே முடிவடைந்தது.
இந்த நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
இதில் ஒன்றிணைந்த எதிரணியிலுள்ள இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர் மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை