(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

காத்தான்குடியில் கண்டனப் பேரணி !

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையினைக் கண்டித்து காத்தான்குடியில் மாபெரும் கண்டனப் பேரணி ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு ; ஐ.நாவுக்கு மகஜர் கையளிப்பு.

சிரியா நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்தும் அதற்கு எதிராக ஐ.நா வை நடவடிக்கை எடுக்க கோரியும் நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது.
தேசிய சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் மற்றும் காத்த நகர் அரசியல் களத்தின் ஏற்பாட்டில் ஜும்ஆ தொழுகையின் பின்னர் காத்தான்குடி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் முன்றலிலிருந்து ஆரம்பமான இந்த கண்டன பேரணி காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்றது.
இக் கண்டன பேரணியில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி திருமதி.நினா பிராண்ட்ஸ்ட்ராபுக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜர் ஒன்றையும் காத்தான்குடி பிரதேச செயலாளர் திரு.யூ.உதயஸ்ரீதரிடம் கையளித்தார்.
“ சிரியா நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை நிறுத்த ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும், முஸ்லிம் நாடுகள் அனைத்தும் சிரியா யுத்தத்தை நிறுத்த ஐ.நாவுடன் இணைந்து செயற்படல் வேண்டும்” என அந்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த கண்டன பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் சிரியாவில் இடம்பெறும் வன்செயல்களை கண்டித்தும், ஐ.நாவை அழுத்தம் கொடுக்கும் வகையிலும் கலந்து கொண்டிருந்தவர்கள் சுலோகங்களை ஏந்தியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை