(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

கடந்த அரசாங்கங்கள் மறைத்து வந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

ஒன்றரை அல்லது இரண்டு தசாப்தங்களாக இருந்த குப்பை பிரச்சினையை கடந்த அரசாங்கங்கள் மறைத்து  வந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.


எவ்வாறாயினும் எந்தவொரு பிரச்சினையையும் 24 மணித்தியாலங்களுக்குள் தீர்க்க முடியாதென்றும் தீர்வுகள் கலந்துரையாடல் மூலமே பெறப்பட வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

குப்பைகளை எரிபொருளாக மாற்றும் சில வேலைத் திட்டங்கள் குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த யோசனைகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

அந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு சுமார் ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகள் அகும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

கொழும்பு பொது நூலக வளாகத்தில், கொழும்பு தேசிய புத்தக கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை