எமது நாட்டிலுள்ள நீதிமன்றத்தின் சில தீர்மானங்கள் குறித்து
திருப்திப்பட முடியாதுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் சுதந்திரத் தன்மையில் நம்பிக்கை வைக்க முடியுமா?
என
மஹிந்த ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி்க்குப்
பதிலளிக்கையிலேயே இதனைக் கூறினார்.
சிலர் நீதிமன்றம் தீர்ப்புக் கூற முன்னர் அரசியல் மேடையில் அதனை
அறிவித்து விடுகின்றனர். இதனாலேயே இந்த சந்தேகம் எழுவதாகவும் அவர்
சுட்டிக்காட்டினார்.
(27) மாலை கூட்டு எதிர்க் கட்சியினருடன் அரசாங்க எதிர்ப்புத்
தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நடாத்திய விசேட சந்திப்பின் பின்னர்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சர் ரவி கருணாநாயக்க விடயத்தில் நீதித்துறை எவ்வாறு
செயற்படுகின்றது என்பதை நாம் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.
ரவி
மட்டுமல்ல இந்த முழு அரசாங்கமும் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்ற கருத்தும்
இருப்பதாகவும் மஹிந்த எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.
