20 ஆயிரம் பட்டதாரிகள் அபிவிருத்தி உதவியாளர்களாக இணத்துக்கொள்ளப்படவிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வடக்கு
மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர்கள் என்னைச் சந்தித்து பட்டதாரிகளின்
பிரச்சினைகள் தொடர்பாக பேசினார்கள். இதுதொடர்பாக கல்வி அமைச்சருடன் பேசி
கிழக்கு மாகாணத்தில் 1700 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள ஏற்பாடு
செய்துள்ளோம் என்றும் பிரதமர் கூறினார்.
மட்டக்களப்பு
ஏறாவூரில் 96 மில்லியன் செலவில் நிருமானிக்கப்பட்ட நகர சபையின் புதிய
கட்டடத்தை நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே
பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொழில்
இல்லாத பட்டதாரிகள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கிறார்கள். இவர்கள்
பல ஆர்பாட்டங்களைச் செய்கிறார்கள் என்று சுட்டிக்காட்டிய பிரதமர் 20 ஆயிரம்
பட்டதாரிகளை அபிவிருத்தி உதவியாளர்களாக நியமிக்க தீர்மானித்தோம்.
இவர்கள்
பிரதேசத்தின் வருமானம், கைதொழில், பெண்களின் நடவடிக்கைகள் உட்பட பலபணிகளில்
இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இவர்களுக்கு முதலில் பயிற்சிகள்
வழங்கப்படும்.
அதனையடுத்து பொறுப்புக்கள் வழங்கப்படும். தற்போதைய தேசிய
வருமானம் முன்னைய ஆட்சிக்காலத்'தில் பெறப்பட்ட கடனுக்கான வட்டியை
செலுத்துவதற்குக்கூட போதாமல் உள்ளது.இதனால் இவர்களை இணைத்துக்கொள்ள சற்று
காலதாமதம் எடுத்தது என்றும் கூறினார்.
நாடு
பெரும் கடன் சுமையுடன் இருந்ததனால் தொடர்ந்தும் ஆட்சி செய்ய முடியாது என்ற
காரணத்தினாலேயே மஹிந்த ராஜபக்ஷ நேர காலத்தேடு ஆட்சிக் கலைத்தார் கிழக்கு
மாகாத்தில் உல்லாசத்துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கையெடுத்து வருகிறோம்
அடுத்த பத்து ஆண்டுகளில் தென்பகுதி போன்று சுற்றுலாத்துறையில் கிழக்கு
மாகாணமும் அபிவிருத்தியடையும் என்றம் அவர் கூறினார்.
அவர்
தொடர்ந்து உரையாற்றுகையில் - கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும்
அமைச்சர்கள் மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக பல்வேறு முயற்சிகளை
மேற்கொண்டுள்ளார்கள். இது தொடர்பாக நாங்களும் பல உதவிகளை வழகியுள்ளோம்.
இந்த
பிரதேசங்களில் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் வாழ்வதைப் போன்று அமைச்சர்கள்
அரசியல்வாதிகளும் உள்ளார்கள். சிறு தொகையானவர்கள் இதனைக் குழப்பி
பிரச்சினைப்படுத்த நினைக்கிறார்கள்.
பல
நெருக்கடிக்கு மத்தியில் ஆட்சியைப் பொறுப்பேற்று வருமாத்தை படிப்படியாக
அதிகரித்துள்ளோம். திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய
சிங்கப்பூரிலுள்ள அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளோம். அரச அமைச்சர்களுடன்
இணைந்து முதலமைச்சரும் இதில் பங்குகொள்கிறார். இந்த திட்டம் முடிவடைந்ததும்
இந்தியா மற்றும் ஜப்பான் இங்கு கூடுதலான கவனத்தைச் செலுத்தும்.
இன்னும்
பத்து வருடங்களில் இதன் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும்.
யுத்தம்
காரணமாக பின்னடைவைச் சந்தித்த கிழக்கு மாகாண சுற்றுலதத்துறையை
அபிவிருத்திச் செய்வதற்காக முதற்கட்டமாக கரையோரப் பகுதிகளை
அடையாளங்கண்டுள்ளோம். பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கான
வேலைத்திட்டங்களை ஆரமப்பிக்கவுள்ளோம். அதன் மூலம் பல தொழில்வாயப்புக்கள்
உருவாக்கப்படும்.
விமான
சேவையை அபிவிருத்தி செய்வதற்காக விமான நிலையங்களை அபிவிருத்தி செய்கிறோம்.
இதனடிப்படையில் மட்டக்களப்பு விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய
திட்டமிட்டுள்ளோம்.
கிழக்கு
மாகாணத்தில் விலங்கு வேளான்மை உள்ளிட்ட கைத்தொழில் துறைகளை அபிவிருத்திச்
செய்ய உதவிகள் வழங்கவுள்ளோம். அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டிய
நிலை காணப்படுகிறது.
ஹம்பாந்தோடை
துறைமுக சேலைகளை தற்போது ஆரம்பித்துள்ளோம் இந்த வருட இறுதியில் மத்தல
விமான நிலையத்தை பெறுப்பேற்பதற்காக வேறு ஒரு கம்பனி முன்வருகிறது. அந்த
பிரதேசங்களில் பாரிய கைத்தொழில் நிலையங்களை அமைப்பதற்கு
எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் இந்த பிரதேசம் பாரியளவில்
அபிவியடையும்.
இந்த
அபிவிருத்தி ஹம்பாந்தோட்டையில் மாத்திரம் வரையறுக்கப்படமாட்டாது. மொனறாகல
ஊடாக அம்பாறை மற்றும் சியம்பலான்டுவ பகுதிக்கு வரும் இந்த அபிவிருத்தி
தொடர்பாக முதவமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறோம்.
ஜனாதிபதி
மைத்திரி பால சிறிசேனவுடன் இணைந்த இந்த அரசு பல்வேறுபட்ட வேலைத்
திட்;டங்களைச் செய்துள்ளது. அபிவிருத்திச் செயற்பாடுகள் செய்கின்ற போது
தொழில்வாய்ப்புக்கள் அதிகரிக்கும் அதன் மூலம் வருமானம் அதிகரிக்கும் அதன்
மூலம் அனைத்துப் பிரதேசங்களும் வளர்ச்சி பெறும் இதனைச் செய்வதற்கு
முழுமையான ஒத்துழைப்பை அனைவரும் வழங்க வேண்டும்' என்றும் பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.
கிழக்கு
மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் ஜோன் அமரதுங்க, பிரதியமைச்சர் பைசல்
காசிம், கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் ரோஹித போகல்லாகம, தவிசாளர் கலபதி,
கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,
சுகதார அமைச்சர் நஸீர், பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் உட்பட பலர்
கலந்துகொண்டனர்.
