உள்ளுராட்சி
மன்ற தேர்தல் தொடர்பான திருத்த சட்மூலம் திருதடதங்களுடன் எதிர்வரும் 24ம்
திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சபை முதல்வரும் உயர்கல்வி மற்றும்
பெருந்தெருக்கள் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல அறிக்கையொன்றின் மூலம்
இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து சிவில் அமைப்புக்கள் மற்றும் மகளிர் சங்க பிரதிநிதிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களுக்கு அமைவாக திருத்தங்களுடன் புதிய உள்ளுராட்சி மன்ற திருத்த சட்ட மூலம் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் பொது உடன்பாட்டின் அடிப்படையில் இந்த திருத்தசட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும் என்றும் அமைச்சர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
