ஹற்றன்
பிரதேசத்தில் பனிமூட்டத்துடனான காலநிலை தற்பொழுது காணப்படுகின்றது.
இதன்
காரணமாக சில சந்தர்ப்பங்களில் வீதிகளில் பயணிப்பது பெரும் சிரமமாக
இருப்பதுடன் வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இப் பகுதியில் வாகனத்தை செலுத்துவோர்
அவதானத்துடன் செல்லவேண்டும் என்று ஹற்றன் போக்குவரத்து பிரிவு வாகன
சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
