கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் 38 ஏக்கர் காணியை விடுவித்துள்ளனர்.
கிளிநொச்சி
– கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவில் 37 ஏக்கர் காணியும் கரைச்சி பிரதேச
செயலகப் பிரிவில் ஒரு ஏக்கர் காணியும் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.
38 ஏக்கர் காணி விடுவிப்பு தொடர்பிலான ஆவணங்களை இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.
கரைச்சி,
கண்டாவளை பகுதியில் உள்ள தனியார் காணிகளே இவ்வாறு
விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவை இனம் காணப்பட்டு காணி உரிமையாளர்களிடம்
கையளிப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலாளர்கள் ஊடாக
முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்
