உள்ளுராட்சி
மன்றத் தேர்தல் தொடர்பான புதிய திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24ஆம்
திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்
கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி
மன்றத் தேர்தல் தாமதமடைகின்றமை தொடர்பில் ஜனாதிபதிக்கோ, அரசாங்கத்திற்கோ
குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் எந்த நியாயமும் கிடையாது. 2012ஆம்
ஆண்டில் நிறைவேற்றப்பட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் 55
கோளாறுகள் காணப்பட்டன என்றும் அவர் கூறினார்.
ஸ்ரீ
லங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது நிறைவாண்டை கோலாகலமான முறையில்
கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன தலைமையில் அடுத்த மாதம் 2ஆம் திகதி கொழும்பு கெம்பல் மைதானத்தில்
நிகழ்வு நடைபெறவுள்ளதாக கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார
மேலும் தெரிவித்துள்ளார்.
