வடமாகாண சபையின் புதிய அமைச்சர்கள் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இதுதொடர்பான நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
வட மாகாண
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கந்தையா சிவநேசன், ஞானசீலன் குணசீலன்
மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோரே புதிய அமைச்சர்களாக
நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய அமைச்சர்களின் பொறுப்புக்கள் :
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் :
வடமாகாண நிதி திட்டமிடல், சட்டம்
ஒழுங்கு, காணி விவகாரம், வீடமைப்பு, போக்குவரத்து, மின்சாரம்,
சுற்றுலாத்துறை, உள்ளு}ராட்சி, மாகாண நிர்வாகம் மற்றும் கிராமிய
அபிவிருத்தி அமைச்சு
மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் (புளொட்):
வடமாகாண விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை,மீன்பிடி,நீர் வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு
மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்:
வடமாகாண
பெண்கள் விவகாரம்,புனர்வாழ்வு,சமூக சேவை,கூட்டுறவு,வர்த்தக வாணிபம்,உணவு
வழங்கல் விநியோகம் சிறுதொழில் முயற்சி ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக வாணிப
அமைச்சு
சபை உறுப்பினர் வைத்தியக் கலாநிதி ஞானசீலன் குணசீலன் (ரெலோ)
சுகாதாரம் சுதேச மருத்துவம், நன்னடத்தை மற்றும் சிறுவர் விவகார அமைச்சு
நான்கு
அமைச்சர்கள் நீக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு புதிததாக
நான்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
அனந்தி சசிதரனின் அமைச்சுக்குரிய செயலாளராக ஆர்.வரதீஸ்வரனும், கந்தையா
சிவநேசனின் அமைச்சுக்குரிய செயலாளராக எஸ்.சத்தியசீலனும் முதலமைச்சரின்
அமைச்சுக்குரிய செயலாளராக ரூபீனி வரதலிங்கங்கமும் புதிய செயலாளர்களாக
நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரி.குருகுலராசா
பதவி நீக்கப்பட்டதால் ஏற்பட்ட கல்வி, பண்பாடு மற்றும் விளையாட்டுத்துறை
அமைச்சு பொறுப்புக்கள் உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரனுக்கு
வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



