(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

இலங்கை - இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி

2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணத் கிரிக்கெட் போட்டித் தொடருக்கு நேரடியாக தகுதிபெற இலங்கை அணிக்கு வாய்ப்பாக அமையும் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர்  இன்று ஆரம்பமாகிறது.
 
 
சுற்றுலா இந்திய கிரிக்கெட் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இடையிலான இந்த ஐந்து ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரின் முதலாவது போட்டி இன்று தம்புள்ள ரன்கிரி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. 
 
 
இரவு பகலாக நடைபெறவுள்ள இந்தப் போட்டி பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
 
 
இரண்டு அணிகளுக்கு இடையில் இதுவரையில் 151 ஒருநாள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 83 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக்கிண்ணத் தொடருக்கு நேரடியாக தகுதிபெற வேண்டுமாயின் இந்திய அணிக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டிகள் இரண்டில் வெற்றிபெற்றாக வேண்டுமென சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
 
 
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 3–0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்த இந்திய அணி ஒருநாள் சர்வதேச போட்டியில் வலுவான இலங்கை அணியை  இந்திய வீரர்கள் எதிர்கொள்ளுகின்றனர். 
உபுல் தரங்கா தலைமையில் இலங்கை அணி இதில் களமிறங்குகிறது.
 
இந்திய அணியில் யாரை களம் இறக்குவது என்பதில் குழப்பம் நிலவுகிறது. 36 வயதான விக்கெட் காப்பாளர் டோனிக்கு இந்த தொடர் மிகவும் முக்கியமாகும். இதில் அவர் தனது திறமையை வெளிப்படுத்தத் தவறினால் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள  உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான  அணியை அடையாளம் காண்பதில் இந்திய தெரிவுக்குழு தீவிரம் காட்டுவதால், டோனியின் செயல்பாடு உன்னிப்பாக கவனிக்கப்படுவதாகவும் தொவிக்கப்படுகிறது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை