(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

நாமும் இணைகிறோம் யாழ்.நல்லூர் திருவிழாவின் சிறப்புக் காட்சிகள் லங்காசிறியில் புதிய வசதிகளுடன்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத் திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது.


கடந்த மாதம் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இந்த திருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெற்று 24ஆம் நாள் தேர்த் திருவிழாவும், 25ஆம் நாள் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறும்.

அந்த வகையில் இதுவரை நடைபெற்ற உற்சவங்களை லங்காசிறியினூடாக நேரலையாக கொடுத்திருந்தோம்.

காலையும் மாலையும் நடைபெறும் சிறப்பு பூஜைகளை தவறாது வழங்கி வந்த நாம், தற்போது தேர்த் திருவிழாவையும் நேரலையாக கொடுக்கவுள்ளோம்.

லங்காசிறியின் இணையத்தளம், முகப்புத்தகத்தினூடாக வழங்கி வந்த நல்லூர் திருவிழாவின் நேரலைக் காட்சிகள் தற்போது, இலங்கை வாழ் மக்களுக்காக தொலைக்காட்சியினூடாகவும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.

நல்லூரானின் தலத்திற்கு வருகை தர முடியாத உள்ளநாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களுக்காக லங்காசிறி இந்த சேவையை முன்னெடுத்துள்ளது.

அந்த வகையில் இலங்கை வாழ் மக்கள் அனைவரும் தற்போது PEO TVஇல் Channal 365என்ற அலைவரிசையினூடாக குறிப்பிட்ட நேரங்களில் நல்லூர் திருவிழாவை நேரடியாக காண முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

நேரலையாக ஒளிபரப்பாகும் நேரம்..
19ஆம் திகதி மாலை 5 மணிக்கு சப்பறத் திருவிழா
20ஆம் திகதி காலை 7 மணிக்கு தேர்த் திருவிழா
21ஆம் திகதி காலை 7 மணிக்கு தீர்த்தோற்சவம்
22ஆம் திகதி மாலை 5 மணிக்கு பூங்காவனம்
23ஆம் திகதி மாலை 5 மணிக்கு வைரவர் உற்சவம்
குறித்த நிகழ்ச்சிநிரலுக்கமைய PEO TV இல் Channal 365 என்ற அலைவரிசையினூடாக நேரடியாக பார்வையிடலாம்.




  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை