இன்றைய தலைமுறை சாமானியர்கள் முதல் நடுத்தர குடும்பத்தினர், பொருளாதார
ரீதியிலாக வளர்ச்சியடைந்தவர்கள் வரை அதிகமாக செலவழிப்பதுவும், அவர்களின்
மாத பட்ஜெட்டில் அதிகம் இடம் பிடிப்பதுவும் குழந்தைகளின் படிப்பு
செலவீனங்கள் தான்.
இன்னதென்று புரியாத இளம் வயதில் புத்தக சுமையை
முதுகில் மாட்டி பள்ளிக்கு அனுப்புவது முதல், வீட்டில் அவர்களுக்கு படிப்பு
சொல்லித்தருகிறோமென கூறி சித்திரவதை செய்வது இன்றைய பெற்றோர் சிலரின்
வாடிக்கையாக உள்ளது.
தன் குழந்தை கல்வி கற்று சமூகத்தில் உயர்ந்திட வேண்டுமென நினைப்பது
பெற்றோர்களின் இயற்கையே. ஆனால், அதற்காக வேண்டி குழந்தைகளை வற்புறுத்தி
கல்வி கற்பிக்க முயலுதல் தவறான ஒன்றாகும் என்கின்றனர் கல்வியாளர்களும்,
மனநல நிபுணர்களும்.
கல்வி என்பது கற்கண்டாக இனிக்க வேண்டுமென்கிறான்
கவிஞன் ஒருவன். ஆனால், அதனை கசப்பு மருந்தாக சிறு வயதில் நாம்
குழந்தைகளுக்கு உருவாக்கப்படுத்தினோமெனில் , நிச்சயம் அவர்களால்
பின்னாட்களில் ஈடுபாட்டுடன் கல்வி கற்க இயலாது.
ஆகவே, குழந்தைகளின்
விருப்பத்திற்கேற்ப இனியதோர் அனுபவமாக கல்வியை சிறு வயது முதல் அவர்களுக்கு
வழங்குவோமெனில் நிச்சயம் அவர்கள் வாழ்வினில்
உயர்ந்திடுவார்கள்..விருப்பத்துடன் கல்வி கற்று.
