வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா (20) காலை இலட்சக்கணக்கான அடியார்கள் புடைசூழ மிகச் சிறப்பாக
இடம்பெற்றது.
(20) காலை 7 மணியளவில் தேர்த் திருவிழா ஆரம்பமாக நடைபெற்றது. இந்த
திருவிழாவில் பங்கேற்க, இல்ஙகைத் தீவின் பல்வேறு பாகங்களில் இருந்தும்
இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடியிருந்தனர்.
வெளிநாடுகளில் வாழும் பெருமளவு புலம் பெயர் தமிழர்களும் இந்த திருவிழாவுக்காக வந்திருந்ததைக் காண முடிந்தது.
படங்கள் - ஊடக நண்பர் யாழ் மயூர பிரியன் நன்றிகள்











