ஒரு தொகை தங்க ஆபரணங்களுடன் அரச புலனாய்வு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க
விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
9.1 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களே குறித்த புலனாய்வு அதிகாரியிடமிருந்து சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
குறித்த 2 கிலோ கிராம் தங்க ஆபரணங்களையும் சிங்கப்பூரில் இருந்து
மிகவும் சூட்சுமமாக கடத்திவரும் போதே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து
சந்தேகநபரான அரச புலனாய்வு அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
