பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று விவாதத்திற்கு
எடுத்துக்கொள்ளப்படவுள்ள தேசிய வருமானச் சட்டமூலம் பல்தேசிய
நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் மாத்திரமே சாதகமாக அமையும்
எனவே அந்த சட்டமூலத்திற்கு தமது எதிர்ப்பை வெளியிடுவதாக முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இந்த சட்டமூலத்தினால் நிதி அமைச்சர் வரி விதிப்பை தீர்மாணிக்கும்
நிலைமை தோன்றும் என்றும் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்
சுட்டிக்காட்டியுள்ளார்.
