
அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையில் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் விஜேதாசவுக்கு எதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமது பீடத்தின் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவருவதை தவிர்ந்து கொள்ளுமாறு தாம் பாராளுமன்றத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் அந்த ஊடக அறிவிப்பில் கூறியுள்ளார்.