(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

பிரச்சினைகள் பலவற்றில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அரசாங்கத்தால் முடிந்துள்ளது

கடந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலப்பகுதியில் நாட்டின் மீது விடுக்கப்பட்டிருந்த சவால்கள் பலவற்றை வெற்றி கொள்வதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்திருப்பதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
 
அமைச்சர் அறிக்கையொன்றை விடுத்து  இதனை தெரிவித்துள்ளார்.
 
நாட்டில் சீர்குலைந்திருந்த தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் பணி தற்போது வெற்றியடைந்துள்ளது. சர்வதேச ரீதியில் இலங்கை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தற்போது நீங்கியுள்ளன. 
 
சமகால அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் வெற்றியடைந்தமையே இதற்கான காரணமாகும்.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நிர்வாக காலப்பகுதியில் மேற்கொண்ட ஊழல் மோசடி மற்றும் பாரிய குற்றச்சாட்டுகளை மூடிமறைக்கும் நோக்கில் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 
 இவை ஊடக காட்சிகள் என்பதை மக்கள் புரிந்து கொண்டிருப்பதாகவும் அமைச்சர்  அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை