இன்று
அதிகாலை 4.00 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி
நிலையத்தினால் 3 மாவட்டங்கள் மண்சரிவு ஆபத்துள்ள இடங்களாக
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, இரத்தினபுரி, களுத்துறை, நுவரெலியா
ஆகிய மாவட்டங்களிலும்;, எஹலியகொட, அயகம, இரத்தினபுரி, குருவிட்ட,
பெல்மடுல்ல, புளத்சிங்கள, பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும்
நுவரெலியாவின் லபுகல பிரதேசத்திலும் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள்
அவதானமாக இருக்க வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.
கடந்த 24
மணித்தியாலங்களுக்குள் நாட்டின் பல பிரதேசங்களில் 75 மில்லி மீற்றருக்கு
மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்
தெரிவித்துள்ளது.
