(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

எகிப்தின் பெரிய பிரமிடு குறித்த ரகசியம் வெளியானது !

எகிப்தில் உள்ள கிசாவின் பெரிய பிரமிடு கட்டுமானத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த மர்ம விலகியுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான கிசாவின் பெரிய பிரமிடு கட்டுமானம் குறித்து பல்வேறு தகவல்கள் இதுநாள் வரை பரவி வந்தது
சிலர் ஏலியன்கள் பெரிய பிரமிடை கட்டியிருக்கலாம் என வாதிட்டனர்.

சுமார் 2500 கிலோ எடை கொண்ட கற்களை மனிதர்களால் எப்படி நகர்த்திச் சென்று கட்டுமானத்தில் ஈடுபட முடிந்தது எனவும் ஆய்வாளர்கள் சந்தேகம் எழுப்பினர்.

எகிப்தின் Khufu அரசனால் கிறிஸ்துவுக்கு முன்னர் 2600 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 20 ஆண்டுகளாக கட்டப்பட்டது கிசாவின் பெரிய பிரமிடு என ஆய்வாளர்கள் வரலாற்று ஆதாரங்களை சுட்டிக்காட்டி உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் 481 அடி உயரம் கொண்ட குறித்த கட்டிடத்தை மனிதர்களால் கட்டி எழுப்புதல் சாத்தியமா என்ற கேள்வி ஆய்வாளர்களுக்கு நீண்ட பல காலமாக விவாதப் பொருளாகவே இருந்தது.

தற்போது அந்த கேள்விகளுக்கு எல்லம் விடை தெரிய வந்துள்ளது.

ஆயிரக்கணக்கான அடிமைகள் படை ஒன்று கிசா பிரமிடு கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்புகளில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இவர்களே படகுகளில் கொண்டுவரப்படும் கற்களை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஏற்பாடு வழியாக கயிறு கட்டி குறித்த கட்டுமான பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.

Merer என அறியப்பட்ட நபர் ஒருவர் குறித்த தகவல்களை ஓலைச்சுவடிகளில் குறித்து வைத்துள்ளார். Wadi Al-Jarf துறைமுகத்தில் இருந்து தற்போது இந்த குறிப்புகளை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

அதில், 2.3 மில்லியன் கற்களை படகுகள் வாயிலாக பிரமிடு கட்டுமானத்திற்கு நைல் நதி வழியாக கொண்டு வந்துள்ளனர். அந்த கற்களை அடிமைகள் 20 ஆண்டுகாலம் செலவிட்டு கட்டி எழுப்பியுள்ளனர்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை