பொருளாதார கஷ்டங்கள் மற்றும் ஏனைய காரணங்களால் பாடசாலைக்கு வராதிருக்கும் மாணவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கான திட்டமொன்றை கல்வியமைச்சு எதிர்வரும் 2018 வரவு செலவுத் திட்டத்துக்குக்காக பிரேரித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாடசாலைக்கு வராதிருக்கும் கஷ்டப்பட்ட மாணவர்களுக்காக மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவது சம்பந்தமாக நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளுடனும் கல்வி அமைச்சு தொடர்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் இதற்கேற்ப பொருளாதாரக் கஷ்டங்கள் மற்றும் வறுமை நிலை காரணமாக பாடசாலைக்கு வராதிருக்கும் மாணவர்கள் பற்றிய தகவல்களை பாடசாலை அதிபர்கள் மூலமாக அடுத்த வருட ஆரம்பத்தில் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளையும் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
